நிலா முற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "தங்க முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை
புலர்கின்ற பொழுது
இருள்சூழ்ந்த போதும்
மூடாதே விழியே
வெளிச்சத்தை தேடு.
தொலைதூர வானில்
ஏணியின் படிகள்
சோர்ந்திடாதே காலே
தோற்றுப்போவாய் நீயே..
ரணமாக்கும் முட்கள்
மலராக மாறும்
துயரென்ன மனமே
துணிவாய்
இனி ஜெயமே..
வடிகின்ற விழிநீர்
கடலாக மாறும்
கரைசேர்த்து உந்தன்
காயங்கள் ஆற்றும்..
விட்டில் பூச்சி நீயல்ல
விளக்கின் மடியில்
சாவதற்க்கு...
பெட்டிப்பாம்பும் நீயல்ல
அடிமைப்பட்டே
வாழ்வதற்க்கு..
முட்டி மோதி எழுந்துவிடு
முறையே
உலகை ஜெயித்திவிடு..
புகழை விண்வெளியிலும்
பரப்பு...
என்றும் வெற்றியை
மண்ணில் நீ
நிரப்பு.....
நன்றிகளுடன் கயல்.
எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Monday, February 22, 2016
Wednesday, February 17, 2016
மனக்கூத்து
நிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை
மனிதனுக்குள் இருக்கும் ஒரு கூத்து
இது
மனக்கூத்தெனும் புதுக்கூத்து.
மழலை மனதில் வரும் கூத்து அது
நிலவை பிடிக்க நினைக்கும்
சிறுகூத்து.
மங்கையவளின் மனக் கூத்து
மண நாள் வேண்டிடும்
திருமணக்கூத்து.
பெற்றவர் ஏங்கிடும்
மனக்கூத்து
பிள்ளையை வளர்த்திடும்
பயக்கூத்து.
நல்லவர் நெஞ்சத்தின் மனக்கூத்து
பலர் நலம் வேண்டிடும்
நற்கூத்து
அரசியல் வாதியின் மனக்கூத்து
அபகரிக்கும்
வெறும் கூத்து
விவசாய மக்களின்
மனக்கூத்து
மழையை வேண்டிடும்
வரக்கூத்து.
வரியவர் மனதின் ஒரேக்கூத்து
வயிற்று பசிக்கான
வழிக்கூத்து.....!
மனிதனுக்குள் இருக்கும் ஒரு கூத்து
இது
மனக்கூத்தெனும் புதுக்கூத்து.
மழலை மனதில் வரும் கூத்து அது
நிலவை பிடிக்க நினைக்கும்
சிறுகூத்து.
மங்கையவளின் மனக் கூத்து
மண நாள் வேண்டிடும்
திருமணக்கூத்து.
பெற்றவர் ஏங்கிடும்
மனக்கூத்து
பிள்ளையை வளர்த்திடும்
பயக்கூத்து.
நல்லவர் நெஞ்சத்தின் மனக்கூத்து
பலர் நலம் வேண்டிடும்
நற்கூத்து
அரசியல் வாதியின் மனக்கூத்து
அபகரிக்கும்
வெறும் கூத்து
விவசாய மக்களின்
மனக்கூத்து
மழையை வேண்டிடும்
வரக்கூத்து.
வரியவர் மனதின் ஒரேக்கூத்து
வயிற்று பசிக்கான
வழிக்கூத்து.....!
Subscribe to:
Posts (Atom)

