Wednesday, February 17, 2016

மனக்கூத்து

நிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்) முகநூல் குழுமத்தில் "முத்திரைக் கவிஞர்" பரிசு பெற்ற கவிதை

மனிதனுக்குள் இருக்கும் ஒரு கூத்து
இது
மனக்கூத்தெனும் புதுக்கூத்து.

மழலை மனதில் வரும் கூத்து அது
நிலவை பிடிக்க நினைக்கும்
சிறுகூத்து.

மங்கையவளின் மனக் கூத்து
மண நாள் வேண்டிடும்
திருமணக்கூத்து.

பெற்றவர் ஏங்கிடும்
மனக்கூத்து
பிள்ளையை வளர்த்திடும்
பயக்கூத்து.

நல்லவர் நெஞ்சத்தின் மனக்கூத்து
பலர் நலம் வேண்டிடும்
நற்கூத்து

அரசியல் வாதியின் மனக்கூத்து 
அபகரிக்கும் 
வெறும் கூத்து

விவசாய மக்களின்
மனக்கூத்து
மழையை வேண்டிடும்
வரக்கூத்து.

வரியவர் மனதின் ஒரேக்கூத்து
வயிற்று பசிக்கான
வழிக்கூத்து.....!

No comments:

Post a Comment