நீ என்னை கடிக்க
நான் உன்னை அடிக்க
தப்பி நீ பறக்க
உன்னை நான் துரத்த
ஹா ஹா
வீர விளையாட்டில்
வென்றவள் நான் தான்
ஏய் நுளம்பே
யார்கிட்ட ?
போட்டுத்தள்ளிட்டோம்ல ...:-)
எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Friday, March 31, 2017
Thursday, March 30, 2017
உண்மை காதல் தோற்றுவிடும்
-------------------------------------------------------
நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .
பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .
அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .
கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .
என்னிடம் இருப்பதெல்லாம்
தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .
உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவிற்கு ஏன்
கடவுளின் தரிசனம் என்று .?
அதுவும் மலர் தானே.....!
அறிந்துகொள் அன்பே .!
கயல் அற்ற விழியாள் என்காதல்
இன்று
ஏழையாகி போகலாம்
விழிநீர் மழையாகி
கடலோடும் கலக்கலாம் .
நீ ரசித்து சுவைத்த
விரும்பி அணைத்த
அனைத்துமே
உன்னை வந்து சேரலாம்
நீ நேசிக்காத என்னையும்
நிஜமான என் காதலையும் தவிர.!!
-------------------------------------------------------
நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .
பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .
அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .
கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .
என்னிடம் இருப்பதெல்லாம்
தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .
உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவிற்கு ஏன்
கடவுளின் தரிசனம் என்று .?
அதுவும் மலர் தானே.....!
அறிந்துகொள் அன்பே .!
கயல் அற்ற விழியாள் என்காதல்
இன்று
ஏழையாகி போகலாம்
விழிநீர் மழையாகி
கடலோடும் கலக்கலாம் .
நீ ரசித்து சுவைத்த
விரும்பி அணைத்த
அனைத்துமே
உன்னை வந்து சேரலாம்
நீ நேசிக்காத என்னையும்
நிஜமான என் காதலையும் தவிர.!!
Tuesday, March 28, 2017
பெண் மீது வீசப்படும்
கற்கள் சில
பெண்ணாய் பிறந்ததால்
என்மீதும் தான்
வீசப் படுகிறது .
மெலிவாய் இருக்கிறாய்
கறுப்பாய் இருக்கிறாய்
குள்ளமாய் இருக்கிறாய்
கூந்தல் குறைவாக இருக்கிறது ...
பற்கள் முன்னுக்கு வந்திருக்கு
கன்னத்தில் பருக்கள் நிறைந்திருக்கு
மூக்கு பெரிசா இருக்கு
இதழ்கள் தடிப்பா இருக்கு ....
கழுத்து நீளம்
இடுப்பு அகலம்
இது மட்டுமா
இன்னும் இருக்கு
இடைக்கு கீழ்
வயிற்றுக்கு மேல்
சொல்லப் போனால்
ஆபாசம் என்பீர்கள்
அதனால்
சுறுக்கி எழுதிவிட்டேன் .
உங்கள் பார்வை
உடலின் மேல் எனில்
காமப்பேயின் கட்டிலில்
தாசியாய் வாழ்வதில்
இஷ்டமில்லை எனக்கு
மனதை நேசிப்பவன் மன்னனாய்
இருக்கத் தேவையில்லை
மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் ....😍l
கற்கள் சில
பெண்ணாய் பிறந்ததால்
என்மீதும் தான்
வீசப் படுகிறது .
மெலிவாய் இருக்கிறாய்
கறுப்பாய் இருக்கிறாய்
குள்ளமாய் இருக்கிறாய்
கூந்தல் குறைவாக இருக்கிறது ...
பற்கள் முன்னுக்கு வந்திருக்கு
கன்னத்தில் பருக்கள் நிறைந்திருக்கு
மூக்கு பெரிசா இருக்கு
இதழ்கள் தடிப்பா இருக்கு ....
கழுத்து நீளம்
இடுப்பு அகலம்
இது மட்டுமா
இன்னும் இருக்கு
இடைக்கு கீழ்
வயிற்றுக்கு மேல்
சொல்லப் போனால்
ஆபாசம் என்பீர்கள்
அதனால்
சுறுக்கி எழுதிவிட்டேன் .
உங்கள் பார்வை
உடலின் மேல் எனில்
காமப்பேயின் கட்டிலில்
தாசியாய் வாழ்வதில்
இஷ்டமில்லை எனக்கு
மனதை நேசிப்பவன் மன்னனாய்
இருக்கத் தேவையில்லை
மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் ....😍l
Saturday, March 25, 2017
திமிர்
| |||
| என்னைவிட்டு விலக | |||
| மறுக்கும் துரோகி | |||
| விட்டுச் சென்றாலும் ஒட்டிக் | |||
| கொள்(ல்)கிறான் . | |||
| எல்லோருக்கும் | |||
| என்னைப் பிடித்த போதிலும் -இவன் இருக்கும்வரை | |||
| என்னை | |||
| வெறுத்தே செல்கின்றனர் . | |||
| தொல்லையாய் | |||
| இருப்பவன் | |||
| அவனுக்கு துணையாய் இன்னொருத்தி | |||
| இருவரிடமும் | |||
| இது வரை விடுதலை கிடைக்கவில்லை | |||
| எனக்கு . | |||
| கொஞ்சம் இருங்கள் | |||
| அறிமுகப் படுத்திவிடுகிறேன் | |||
| அவர்களை | |||
| இல்லையெனில் பலி வாங்கக் கூடும் . | |||
| இதோ | |||
| இவன் தான் என் எதிரி | |||
| பெயரை | |||
| கோவம் என்று வைத்திருக்கிறான் | |||
| அவன் துணைவி இவள் | |||
| தான் | |||
| பெயரை "திமிர்" என வைத்திருக்கிறாள் | |||
| இப்போது சொல்லுங்கள் | |||
| கொலை செய்வது எப்படி ....? |
Friday, March 24, 2017
Thursday, March 23, 2017
எனக்கான உலகம்
| எனக்கான உலகம் |
| வட்டமோ சதுரமோ |
| அது |
| எனக்கே எனக்காய் மட்டும் |
| அங்கு |
| மானிடருக்கு அனுமதி இல்லை . |
| இங்கு போல் |
| அங்கு போலியாய் புன்னகைப்பதில்லை |
| பொய்யான |
| முகங்களும் இல்லை. |
| என் உலகம் |
| விசித்திரமானது |
| முட்கள் மேல் தான் |
| உறங்குகிறேன் |
| ஆனால் |
| அவை என்னை குத்துவதில்லை |
| தீயில் தான் குளிக்கிறேன் |
| அதுவும் என்னை சுடுவதில்லை . |
| சுடுக்காட்டு பிணங்கள் தான் |
| என்னை |
| சூழ்ந்து இருக்கின்றது |
| அதில் |
| துர்வாடை என்பது |
| துளியும் இல்லை . |
| உங்கள் உலகத்திற்கும் |
| என் உலகத்திற்குமான |
| எல்லைக் கோட்டை நிர்ணயித்தவள் |
| நானே அதனால் |
| அறிந்திருக்கிறேன் எதுவரை உங்களுடன் |
| உறவாட வேண்டும் என்பதை ... |
Wednesday, March 22, 2017
| பெண் பாவம் பொல்லாதது |
| கட்டியமனைவிக்கு பொட்டெனும் |
| வாங்கிக்குடுக்காத |
| வெட்டிக் கணவன் |
| விபச்சாரி வீட்டு விருந்தோம்பலில் |
| வீராப்பாய் பேசுகின்றான் .. |
| பெண் பாவம் பொல்லாதது .! |
| தர்மம் தலைகாக்கும் |
| தண்டிய பணத்தில் வேட்டிச்சேலை |
| வாங்கிக்கொடுத்து |
| வோட்டுப் பிச்சைக்கேட்கும் அரசியல்வாதி |
| மேடையில் |
| கொடை வள்ளலாய் பேசுகின்றான். |
| தர்மம் தலை காக்கும் .! |
| அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் |
| முதியோர் இல்லத்தில் |
| பெற்றவர்க்கு இடம் பெற்றுக்கொடுத்த பட்டதாரி ஆசிரியர் |
| பாடம் நடத்திக்கொண்டிருந்தார். |
| அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்...! |
| சான் ஏற முழம் சறுக்கும் |
| சாக்கடையில் வேலை செய்பவன் |
| மட்டும் |
| சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தான் |
| பழமொழியை . |
| சான் ஏறி முழம் சறுக்கி . |
Tuesday, March 21, 2017
வா
அந்த விண்மீன்
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
அந்த விண்மீன்
அருகில்
விடியும் வரை
ஏதேனும் கவிதை
எழுதலாம்..
நீ என்னையும்
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும்
பொய்கள் உரைக்கலாம்.
நான் உன்னையும்
நிலவோடும் ஒளியோடும்
ஒப்பிட்டு
ஏதேனும்
பொய்கள் உரைக்கலாம்.
உனக்கு பிடித்த
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி
அளிக்கலாம் .
என் விரல்களினதும்
எனக்கு பிடித்த
உன் மீசையினதும்
மெளன மொழியினை
அறிந்து
இணைந்து வாழ அனுமதி
அளிக்கலாம் .
வா வா இதோ இந்த இரவில்
ஏதேனும்
கிறுக்கலாம்
இது போல
கவிதை எனும் பெயரில்
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
💜
ஏதேனும்
கிறுக்கலாம்
இது போல
கவிதை எனும் பெயரில்
Subscribe to:
Posts (Atom)















