Thursday, May 18, 2017

8ம் ஆண்டு நினைவு நாள் .- 2017

எம்மை பித்துப் பிடிக்க வைத்து 
புத்தன் 
இரத்தம் குடித்த நாள்
மண்ணுக்குள் இன்னும் மக்கிப் போகாத உறவுகளின்
மரண ஓலம் 
மானமுள்ள தமிழனின் 
மனதில் இன்னும் எரிந்துகொண்டிருக்கும்.

Friday, March 31, 2017

நீ என்னை கடிக்க
நான் உன்னை அடிக்க
தப்பி நீ பறக்க
உன்னை நான் துரத்த
ஹா ஹா
வீர விளையாட்டில்
வென்றவள் நான் தான்

ஏய் நுளம்பே
யார்கிட்ட ?
போட்டுத்தள்ளிட்டோம்ல ...:-)

Thursday, March 30, 2017

உண்மை காதல் தோற்றுவிடும்
-------------------------------------------------------

நீ விரும்பும்
நந்தவனமும் நதிக்கரையும்
நஞ்சையும் புஞ்சையும்
என் வசம் இல்லை .

பட்டத்து யானையும் பரிவாரமும் பொன் கட்டிலும் பூ மெத்தையும்
என் சொந்தமாய் இல்லை .

அடுக்கு மாடிகளும்
அதி சொகுசு வாகனமும்
ஆணையிட அடிமைகளும்
அள்ளி வீச வைரங்களும்
எனக்கானதாய் இல்லை .

கொஞ்சிடும் குரலும்
கோவைப்பழ இதழும்
சிவந்த முகமும்
கவர்ந்திடும் விழிகளும் என்னிடம்
இல்லவே இல்லை .

என்னிடம் இருப்பதெல்லாம்

தாலாட்டே கேட்காத செவிகளும்
கண்ணீரில் குளிக்கின்ற விழிகளும்
அன்பிற்காய் ஏங்கும் இதயமும்
தனிமைப் படுத்தப் பட்ட உள்ளமும் தான் .

உன் மௌனத்தின் பாஷைகள்
புரிகின்றது உயிரே
கடதாசி பூவிற்கு ஏன்
கடவுளின் தரிசனம் என்று .?
அதுவும் மலர் தானே.....!

அறிந்துகொள் அன்பே .!
கயல் அற்ற விழியாள் என்காதல்
இன்று
ஏழையாகி போகலாம்
விழிநீர் மழையாகி
கடலோடும் கலக்கலாம் .

நீ  ரசித்து சுவைத்த
விரும்பி அணைத்த
அனைத்துமே
உன்னை வந்து சேரலாம்
நீ நேசிக்காத என்னையும்
நிஜமான என் காதலையும் தவிர.!!

Tuesday, March 28, 2017

பெண் மீது வீசப்படும்
கற்கள் சில
பெண்ணாய் பிறந்ததால்
என்மீதும் தான்
வீசப் படுகிறது .

மெலிவாய் இருக்கிறாய்
கறுப்பாய் இருக்கிறாய்
குள்ளமாய் இருக்கிறாய்
கூந்தல் குறைவாக இருக்கிறது ...

பற்கள் முன்னுக்கு வந்திருக்கு
கன்னத்தில் பருக்கள் நிறைந்திருக்கு
மூக்கு பெரிசா இருக்கு
இதழ்கள் தடிப்பா இருக்கு ....

கழுத்து நீளம்
இடுப்பு அகலம்
இது மட்டுமா
இன்னும் இருக்கு
இடைக்கு கீழ்
வயிற்றுக்கு மேல்
சொல்லப் போனால்
ஆபாசம் என்பீர்கள்
அதனால்
சுறுக்கி எழுதிவிட்டேன் .

உங்கள் பார்வை
உடலின் மேல் எனில்
காமப்பேயின் கட்டிலில்
தாசியாய் வாழ்வதில்
இஷ்டமில்லை எனக்கு

மனதை நேசிப்பவன் மன்னனாய்
இருக்கத் தேவையில்லை
மாற்றுத் திறனாளியாய் இருந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் ....😍l

Sunday, March 26, 2017

உன்
இதயத்தின் இசைக்கு
என்
இதழ்கள் புன்னகைக்கும்

என்றும்
அருகில்  நீ இரு.....!

Saturday, March 25, 2017

திமிர் பிடித்தவள் என 
சிலர் 
என்னை 
சீண்டும் போது
மௌனமாய் புன்னகைத்து 
செல்கிறேன்
பாவம் அவர்கள் 
இன்னும் 
பார்த்ததில்லை உன்னை ..!


திமிர்



என் எதிரியை கொலை செய்ய வேண்டும் 
முயற்சித்து 
பல முறை தோன்றுவிட்டேன் .
என்னைவிட்டு விலக 
மறுக்கும் துரோகி 
விட்டுச் சென்றாலும் ஒட்டிக் 
கொள்(ல்)கிறான் . 
எல்லோருக்கும் 
என்னைப் பிடித்த போதிலும் -இவன் இருக்கும்வரை 
என்னை 
வெறுத்தே செல்கின்றனர் .
தொல்லையாய்
இருப்பவன் 
அவனுக்கு துணையாய் இன்னொருத்தி 
இருவரிடமும் 
இது வரை விடுதலை கிடைக்கவில்லை 
எனக்கு .
கொஞ்சம் இருங்கள் 
அறிமுகப் படுத்திவிடுகிறேன் 
அவர்களை
இல்லையெனில் பலி வாங்கக் கூடும் .
இதோ
இவன் தான் என் எதிரி 
பெயரை 
கோவம் என்று வைத்திருக்கிறான் 
அவன் துணைவி இவள்
தான்
பெயரை "திமிர்" என வைத்திருக்கிறாள் 
இப்போது சொல்லுங்கள்
கொலை செய்வது எப்படி ....?