எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Wednesday, March 30, 2016
இப்படியும் காதல் இருக்கும்
சிரிக்காதே
சுத்தமா பிடிக்கல
உதட்டை பிதுக்காதே
உனக்கு
பொருந்தவே இல்லை
சிவப்பு சாரி கட்டாத
காளி மாதிரி
இருக்க
வெள்ளை சுடிதார் வேணாம்
கன்பார்ம்
மோஹினி தான்
மாடர்ன் டிரஸ்
உனக்கு செட் ஆகாது
கிராமத்து டிரஸ்
சிச்சீ
செட்டே ஆகாது
ஓவரா பேசாத
கேட்க சகிக்கல
முத்தம் கேக்காத
வாமிட் வருது
கோவப்படாத
கேவலமா இருக்கு
முரைக்காத
சிரிக்க முடியல
லூஸ் கேர் விடாத
பிச்சக்காரி மாதிரி
இருக்கிற
கண்ணாடிய பார்க்காத
பயந்திட போற.
போடா நாயே
நான் போறேன்
போடி நீ போ
நீ போன பின்
என் உடல் இந்த
இடத்தில்
நிச்சயம்
மண்ணோடு
மக்கிப்போய் விடும்.
உயிர் பிரிந்த பின் உடலுக்கென்ன
வேலை..!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment