எழுத்துக்களின் இடையே மரணிக்க சொல்லி புதைக்கின்றேன் மனதை வதைக்கும் வலிகளின் வடுக்களை . நிந்திக்க வேண்டாம் நினைவுகளே நித்தம் துடிக்கின்றேன் உங்களால் ..!!
Thursday, March 24, 2016
தனிமையின் தவிப்புகள்
கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்
அன்னையின் மடியில்
ஆசையாய் பிள்ளைகள்
உறங்கும் போது
இதோ
இவள் மட்டும்
தனிமையில் தாய் மடி
தேடியபடி
உன் கரங்களில் கொடுக்கும்
ஒரு பிடி சோறு-உன்
இதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு
நெற்றி முத்தம்
இவைகளுக்காய்
ஏக்கங்களுடன் இதோ உன்
மகள்.
அறிவாயா தாயே
தனிமை கொடுமையென
தாயை இழந்தவள்
அனாதையென
என் வலியினை நீ அறிய
வாய்ப்பில்லை
கண்ணீரை துடைத்துவிட-உன்
கல் நெஞ்சில் ஈரமில்லை.
என் மைதீர்ந்த
எழுதுகோலிடம் கேள்
தனிமையின் ரணங்களை
தவிப்போடு சொல்லும்..
தாயவள் உனக்கான என்
துடிப்பை என்
தலையணையிடம் கேள்
விடியாத என் இரவின் வேதனைகளை
விழி நீரோடு சொல்லும்..!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment